உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பொங்கலுக்கு வரல... ஆனால் தீபாவளிக்கு சர்ப்ரைஸ் இருக்கு : அரசன் அப்டேட் தந்த சிம்பு

பொங்கலுக்கு வரல... ஆனால் தீபாவளிக்கு சர்ப்ரைஸ் இருக்கு : அரசன் அப்டேட் தந்த சிம்பு

வட சென்னை பின்னணியில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‛அரசன்'. பல தடைகள், பிரச்னைகளை கடந்து படம் தயாராகி வருகிறது. தாணு தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். விஜய் சேதுபதி, பிரியங்கா மோகன், ஆண்ட்ரியா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் தற்போது படம் அந்த சமயம் வெளியாகவில்லை.

இதுபற்றி சென்னையில் நடந்த கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய சிம்பு, ‛‛அரசன் படம் 2027 பொங்கலுக்கு வரும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து உள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக படம் அப்போது வெளியாகாது. படத்தை அவசரமாக வெளியிடலாம் ஆனால் சரியாக வரவில்லை என்றால் சங்கடமாகிவிடும். நீங்கள் பெருமைப்படும் விதமாக நான் ஒரு படம் பண்ணுவேன் என உங்கள் எல்லோருக்கும் ஒரு வாக்குறுதி கொடுத்தேன். அதை காப்பாற்றும் படமாக அரசன் கண்டிப்பாக தரமான சம்பவம் செய்யும்.

வெற்றிமாறனிடம் பொங்கலுக்கு படம் வரவில்லை என கூறிவிட்டீர்கள். அதுவரை ரசிகர்களால் காத்திருக்க முடியாது. இந்த படம் எடுப்பதற்கு முன்னால் இது எந்த மாதிரியான ஒரு படம் என ட்ரோனில் வைத்து சில காட்சிகள் படமாக்கினோம். இதுவரை நாங்கள் படமாக்கியதை ‛தி வேர்ல்டு ஆப் அரசன்' என்ற பெயரில் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை தீபாவளிக்கு தியேட்டர்களில் பிரத்யேமாக வெளியிட உள்ளோம்'' என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !