உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அரசியலில் குதிக்க நடிகர் தனுஷ் தீவிரம்; ரசிகர் மன்ற உறுப்பினர் சேர்க்கை மும்முரம்

அரசியலில் குதிக்க நடிகர் தனுஷ் தீவிரம்; ரசிகர் மன்ற உறுப்பினர் சேர்க்கை மும்முரம்


அரசியலில் களமிறங்க, நடிகர் தனுஷ் தீவிரம் காட்டி வருகிறார். முதல் கட்டமாக, ரசிகர் மன்றத்துக்கு புதிய கொடியை, கடந்த மாதம் அறிமுகம் செய்தார். பின், ரசிகர் மன்றத்தை பலப்படுத்த, கோவை மாவட்டத்தில், சட்டசபை தொகுதி வாரியாக உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட்டது.

இதுகுறித்து, தனுஷ் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூறியதாவது: கோவையில் தொகுதிக்கு தலா 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். தொகுதி வாரியான உறுப்பினர் சேர்க்கைக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால், இதே பாணியில் தமிழகம் முழுதும் உறுப்பினர் சேர்க்கையை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய், த.வெ.க., கட்சியை தொடங்கி, இரண்டு ஆண்டுகளில் ஆட்சியை பிடித்துள்ளார். விஜய் ரசிகர்களோடு இணைந்து, தேர்தல் பணிகளை பார்த்த, எங்கள் மன்ற நிர்வாகிகளும், அரசியலில் இறங்க தீவிரம் காட்டி வருகின்றனர். அதற்கு தடை போடாமல், தனுஷ் ஊக்கம் கொடுக்கிறார்.

மேலும், அடுத்த ஆண்டுடன், சினிமாவுக்கு தனுஷ் நடிக்க வந்து, 25 ஆண்டு நிறைவடைகிறது. அந்த நிகழ்வையும் பெரிதாக கொண்டாட உள்ளோம். அதற்கு முன், உறுப்பினர் சேர்க்கையை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !