சினிமாவில் கேரக்டரின் வெற்றிக்காக கெட்டப்பை மாற்ற அதிகம் மெனகெட்ட தமிழ் நடிகர், நடிகைகள்
ஒரு சினிமாவின் உண்மையான வெற்றி என்பது ரசிகர்களிடம் அந்த படத்தின் கதாபாத்திரங்கள் பேசப்படும் போது தான் கிடைக்கும். அப்படி படத்தின் பெயர் கூட தெரியாமல் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த கேரக்டர்கள் ஏராளம். நடிப்பிற்காக கேரக்டர்கள் பேசப்பட்டாலும் அந்த கேரக்டருக்கு கூடுதல் பலம் சேர்ப்பதற்காக தமிழ் சினிமாவில் கதாபாத்திரத்தின் இயல்பான உணர்வையும் வெற்றியையும் கொண்டு வர, தங்கள் உடலமைப்பையும் தோற்றத்தையும் (Make-over / Look Transformation) முற்றிலுமாக மாற்றி மெனக்கெட்ட முக்கிய நடிகர்கள் மற்றும் நடிகைகளின் பட்டியல் இதோ...
கமல்ஹாசன்
தசாவதாரம் : 10 வித்தியாசமான கதாபாத்திரங்களுக்காக மணிக் கணக்கில் ப்ரோஸ்தடிக் (Prosthetic) மேக்கப் போட்டுக்கொண்டு நடித்தார் கமல்.
அபூர்வ சகோதரர்கள், இந்தியன், அவ்வை சண்முகி படங்களின் கெட்டப்புகளுக்காக தமிழ் சினிமாவில் முதன்முதலில் தீவிர தோற்ற மாற்ற முயற்சி எடுத்த முன்னோடி இவர் என்ற சொல்லலாம்.
விக்ரம்
ஐ (I): பாடிபில்டர், மாடல், கூனன் மற்றும் மிருக தோற்றம் என 4 விதமான கெட்டப்புகளுக்காக உடல் எடையை 56 கிலோ வரை குறைத்து, மீண்டும் ஏற்றி மிகப்பெரிய உடல் மாற்றத்தை செய்தார். பிதாமகன், அந்நியன், தங்கலான் என ஒவ்வொரு படத்திலும் முற்றிலும் வித்தியாசமான மேக்கப், உடல் மொழி மற்றும் தோற்றத்திற்காக பல மாதங்கள் உழைத்தவர்.
சூர்யா
வாரணம் ஆயிரம் : பள்ளி மாணவன் முதல் 60 வயது முதியவர் வரை பல தோற்றங்களுக்காக உடல் எடையைக் குறைத்தும், சிக்ஸ் பேக் வைத்தும் அசத்தினார். கங்குவா பழங்குடியின தலைவன் கெட்டப்புகளுக்காக பிரத்யேக உடற்பயிற்சி மற்றும் மேக்கப் மாற்றங்களைச் செய்தார்.
ஆர்யா
சார்பட்டா பரம்பரை : பாக்சர் கதாபாத்திரத்திற்காக கடுமையான உடற்பயிற்சி செய்து உடலை முற்றிலும் ஒரு தொழில்முறை குத்துச்சண்டை வீரரைப் போல மாற்றினார். நான் கடவுள் படத்தில் அகோரி கெட்டப்பிற்காக நீண்ட முடி, தாடி வளர்த்து தன் இயல்பான சாக்லேட் பாய் பிம்பத்தை மாற்றினார்.
விஷால்
அவன் இவன் : பாலாவின் அவன் இவன் படத்தில் விஷால் மாறு கண் உடையவராக நடித்தார். இதற்காக கண்களில் கடும் சிரமங்களை எதிர் கொண்டார். ஓரிரு ஆண்டுக்கு முன்பு வரை கூட அவருக்கு இந்த கேரக்டரின் பாதிப்பு இருந்தது.
சிலம்பரசன்
மாநாடு, வெந்து தணிந்தது காடு: உடல் எடையை 100 கிலோவுக்கு மேல் இருந்து 70 கிலோவிற்கும் குறைவாகக் குறைத்து, 19 வயது இளைஞன் (முத்து) கதாபாத்திரத்திற்காக ஒல்லியான கெட்டப்பிற்கு மாறினார்.
அனுஷ்கா ஷெட்டி
இஞ்சி இடுப்பழகி: உடல்பருமன் கொண்ட பெண் கதாபாத்திரத்திற்காக நிஜமாகவே 120 கிலோவிற்கும் அதிகமாக உடல் எடையை ஏற்றி நடித்தார். பாகுபலி படங்களுக்காக கைதியான தேவசேனா தோற்றத்திற்காக மேக்கப் மற்றும் உடல் மொழியில் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டார்.
பூஜா
நான் கடவுள் : கண்பார்வையற்ற பிச்சைக்காரி கதாபாத்திரத்திற்காக கண்களைச் சிமிட்டாமல் விசித்திரமாக வைத்துக் கொண்டு நடித்ததுடன், முற்றிலும் அவலமான தோற்றத்திற்காகப் பாராட்டப்பட்டார்.
ராதிகா
தாய்கிழவி : அடவாடி காட்டும் வயதான கிராமத்து பெண் பவுனுதாயி கதாபாத்திரத்திற்காக அடையாளமே தெரியாத அளவிற்கு தனது தோற்றத்தை மாற்றி நடித்தார் ராதிகா. கமல்ஹாசனுக்கு இணையாக தனது தோற்றத்தை முற்றிலும் மாற்றுவதற்காக மேக்கப்பிற்காக இவ்வளவு மெக்கெட்ட நடிகை என்ற பாராட்டை பெற்றார் ராதிகா.