உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விவாத நிகழ்ச்சி நடத்தும் சேரன்

விவாத நிகழ்ச்சி நடத்தும் சேரன்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'நீயா நானா' நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இதை தொடர்ந்து பல சேனல்களில் இதே சாயலில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக தொடங்கியது. அந்த வகையில் ஜெயா தொலைக்காட்சியில் 'சரியா தவறா' என்ற விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இதனை இயக்குநரும், நடிகருமான சேரன் தொகுத்து வழங்குகிறார்.

இதுகுறித்து சேரன் கூறும்போது “முதல் முறையாக சின்னத்திரையில் உங்களோடு பேசப்போகிறேன். நம்மிடம் இருக்கும் நல்ல விசயங்கள் பற்றி நாம் விவாதிக்கும் முக்கிய தலைப்புகளில், குழப்பங்களில் இருப்பவர்களுக்கு இது தீர்வு. தீர்வோடு இருப்பவர்களுக்கு இது தெளிவு.

நான் சரி எனில் நீ தவறா... இல்லை.. இரண்டுபேருமே சரியா அதுவும் இல்லை.... பேசாமலே இருந்தா அதுவே மக்களுக்கு புரிஞ்சுடும்னு நினைக்கிறது சரியா. இல்லை நான் மக்களுக்கு புரிய வைக்க முயற்சிப்பேன்னு அட்வைஸ் வரைக்கும் போறது தவறா? எல்லா விவாதங்களுக்கும் இரண்டு பக்கம் இருக்கு இல்லை பல பக்கங்கள் இருக்கு.

இது உங்களுக்கான மேடை. உங்களின் பார்வையை பேசுங்கள். உங்களுக்கான தெளிவை எடுத்துச் செல்லுங்கள். நான் கூப்பிடுவது மக்களை அவர்களோடு பேச அவர்களை பேச வைக்க வாங்க பேசலாம்” என்கிறார் சேரன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

கைப்புள்ள
2026-08-24 18:36:28

வாழ்த்துக்கள். ஆவலோடு காத்து இருக்கிறேன்