தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற ரிஸ்க் எடுப்பார்களா நாகார்ஜுனா அன்ட் சன்ஸ் ?
நடிகர் நாகார்ஜுனா தற்போது தெலுங்கில் தனது நூறாவது படமாக 'கிங்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே ஏற்கனவே 1989-ல் மணிரத்னம் இயக்கத்தில் தெலுங்கில் நாகார்ஜுனா நடிப்பில் வெளியாகி வெற்றியைப் பெற்ற 'கீதாஞ்சலி' படம் (தமிழில் 'இதயத்தை திருடாதே) டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி திரையரங்குகளில் பெரிய அளவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்தப் படம் குறித்து நாகார்ஜுனா கூறும்போது, மணிரத்னம் இந்த படத்திற்காக பல ஹீரோக்களை தேர்வு செய்து பலர் அதில் நடிக்க தயங்கியபோது, இறுதியில் நான் அந்த படத்தில் நடிக்க துணிச்சலாக முடிவெடுத்தது எனது திரை வாழ்க்கையில் மிக முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியது'' என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற கீதாஞ்சலி ரீ ரிலீஸ் புரமோஷனில் மேலும் அவர் கூறும்போது, “என்னுடைய மகன்கள் நாக சைதன்யா மற்றும் அகில் இருவருமே வழக்கமான படங்களை மட்டுமே தேர்ந்தெடுக்காமல், நான் எடுத்தது போலவே கொஞ்சம் ரிஸ்க் எடுத்து தைரியமான மற்றும் சவாலான படங்களை வரும் காலங்களில் தேர்ந்தெடுக்க வேண்டும். 90-களில் நடிகர்களுக்கு சில தோல்விப் படங்கள் அமைந்தாலும், அவர்களுக்கு மீண்டும் கம்பேக் கொடுக்க வாய்ப்பு அதிகம் இருந்தது. ஆனால், இன்றைய சூழலில் திரையுலகில் அப்படி வாய்ப்பு கிடைப்பது கடினம் என்று கூறியுள்ளார்..
மூத்த மகன் நாக சைதன்யா தற்போது விருபாக்சா என்கிற படத்தில் நடித்து வருகிறார். இளைய மகன் அகில் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'லெனின்' திரைப்படம் 100 கோடி வசூலித்து இப்போதுதான் அவருக்கு முதல் வெற்றியை கொடுத்து உற்சாகப்படுத்தியுள்ளது. இருவரும் தந்தையின் விருப்பம் போல இனியாவது ரிஸ்க் எடுப்பார்களா ?