தமன்னா தாக்கத்தை ஏற்படுத்துவாரா பூர்ணா ?
ஒரு பாடலுக்கு ஹீரோயின்களின் நடனம் என்பது தமிழ் சினிமாவில் இருக்கும் நீண்ட கால டிரெண்ட்.. தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களில் அப்படியான பாடல்களில் அதிக வியூஸ்களை அள்ளியவர் நடிகை தமன்னா.
'ஜெயிலர்' படத்தில், 'காவாலாய்யா' பாடலுக்கு அவர் நடனமாடினார். அந்தப் பாடல் யு டியூப் தளத்தில் லிரிக் வீடியோவாக 250 மில்லியன் பார்வைகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதன் வீடியோ பாடல் 421 மில்லியன் பார்வைகளை இதுவரை பெற்றுள்ளது.
'ஜெயிலர்' படத்தைப் போலவே 'ஜெயிலர் 2' படத்திலும் இப்படியான ஒரு நடனப் பாடலை அமைத்துள்ளனர். 'அல்ல பொலேலோ' என்ற அந்தப் பாடல் நாளை வெளியாக உள்ளது. இதற்கான புரோமோ நேற்று வெளியானது. அதில் பாடலுக்கு நடிகை பூர்ணா நடனமாடி உள்ளார்.
தமன்னாவின் பாடல் ரசிகர்களிடமும், வியூஸ்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு பாடல். அவரைப் போல பூர்ணாவும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவாரா என்பது பாடல் நாளை வெளிவரும் போது தெரிய வரும்.