உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நல்ல கதைகளில் நடிக்கவே விரும்புகிறேன் - அதிதி ஷங்கர்

நல்ல கதைகளில் நடிக்கவே விரும்புகிறேன் - அதிதி ஷங்கர்

இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி, ‛விருமன்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து ‛மாவீரன், நேசிப்பாயா' ஆகிய படங்களில் நடித்தார். இவரது நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ‛ஒன்ஸ்மோர்'. விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்க, அர்ஜூன் தாஸ் ஹீரோவாக நடித்துள்ளார். காதல் கதையில் உருவாகி உள்ள இப்படம் சில தாமத்திற்கு பின் வரும் ஆக., 27ல் ரிலீஸாகிறது.

அதிதி அளித்த பேட்டி : ‛‛இந்த படத்தின் கதையும், அதில் சொல்லப்பட்ட காதலும் புதிது. நான்கு ஆண்டுகளில் 4 படங்களில் மட்டும் நடித்துள்ளேன் என கேட்கின்றனர். படங்களை வாரிக் குவித்து நடிக்க வேண்டிய அவசியம் இல்லை, நல்ல கதைகளில் நடிக்கவே விரும்புகிறேன். இந்த படம் துவங்குவதற்கு முன் அர்ஜூன்தாஸ் என்னிடம் சரியாக பேசக்கூட மாட்டார். இப்போது எனது நெருக்கமான நண்பராகிவிட்டார். அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் நகைச்சுவை கலந்த காதல் படம் இது. எனக்கும் அர்ஜூன் தாஸிற்கும் உள்ள கெமிஸ்ட்ரியை விட புதுமுகம் சோனா உடன் அவருக்கான கெமிஸ்ட்ரி சூப்பர்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !