விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் முன்பதிவுக்கு வரவேற்பு
ADDED : 1 days ago
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். ஆகஸ்ட் 14 ஆம் தேதி அன்று இப்படம் திரைக்கு வருகிறது . இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடந்து முடிந்ததைத் தொடர்ந்து, தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகளுக்கான முன்பதிவு நேற்று மாலை தொடங்கியது.
பகுதி அளவிலான முன்பதிவுகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கே ஓரளவு முன்பதிவு சிறப்பாக அமைந்துள்ளது. இது ஒரு நல்ல தொடக்கமாகும். மேலும், பல திரையரங்குகளின் முன்பதிவுகள் திறக்கப்படும்போது விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நாக வம்சி, சாய் சவுஜான்யா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.