உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நயன்தாராவுக்கு இந்தாண்டு 6 படங்கள் ரிலீஸ்

நயன்தாராவுக்கு இந்தாண்டு 6 படங்கள் ரிலீஸ்

2026ம் ஆண்டில் நான்கு மொழிகளிலும் நடித்த ஒரு நடிகை என்ற பெயர் நயன்தாராவுக்கு வந்துவிடும். இந்த வருடத் துவக்கத்தில், சங்கராந்திக்கு அவர் தெலுங்கில் நாயகியாக நடித்த 'மனஷங்கர வரபிரசாத் காரு' படம் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்றது.

அதற்கடுத்து மலையாளத்தில் மே 1ல் அவர் நடித்த 'பேட்ரியாட்' படம் வெளிவந்தது. அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றத்தைத் தந்த ஒரு படம்.

அடுத்து இந்த மாதத்தில் ஒரே வாரத்தில் தமிழ் மற்றும் கன்னடப் படங்கள் வெளியாக உள்ளன. கன்னடத்தில் யாஷ் நடித்து ஆகஸ்ட் 26ல் வெளியாக உள்ள 'டாக்சிக்' படத்தில் நயன்தாராவும் ஒரு கதாநாயகி. 2010ல் 'உபேந்திரா' நடித்த 'சூப்பர்' படத்தில் நடித்ததற்குப் பிறகு நயன்தாரா நடித்து வெளிவர உள்ள கன்னடப் படம் இது.

அடுத்து ஆகஸ்ட் 28ல் தமிழில் 'ஹாய்' படம் வெளிவர உள்ளது. இந்த வருடத்தில் நயன்தாரா நடித்து வெளிவர உள்ள படம் இது. கடந்த வருடத்தில் 'டெஸ்ட்' படம் மட்டுமே நயன்தாரா நடித்து வெளிவந்தது. அதுவும் தியேட்டர்களில் வெளியாகாமல் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. 2024ல் நயன்தாரா ஒரு தமிழ்ப் படத்தில் கூட நடிக்கவில்லை.

ஆனால், இந்த 2026ல் இதற்கடுத்து 'மூக்குத்தி அம்மன் 2, மண்ணாங்கட்டி சின்ஸ் 1960' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இதன்மூலம் இந்தாண்டில் மட்டும் அவருக்கு 6 படங்கள் ரிலீஸ் என்ற பெருமை கிடைக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !