உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தந்தை டைரக்ஷனில் அறிமுகமாகும் மகளுக்கு பேருந்து நிலைய படப்பிடிப்பில் ஏற்பட்ட அதிர்ச்சி

தந்தை டைரக்ஷனில் அறிமுகமாகும் மகளுக்கு பேருந்து நிலைய படப்பிடிப்பில் ஏற்பட்ட அதிர்ச்சி


கன்னட திரையுலகில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக குறிப்பிடத்தக்க ஹீரோவாக வலம் வருபவர் துனியா விஜய். தற்போது 'சிட்டி லைட்ஸ்' என்கிற படத்தின் மூலம் முதன்முறையாக இயக்குனராகவும் மாறியுள்ள இவர் தனது மகள் மோனிஷா விஜயகுமாரை இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்துகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியான நிகழ்வு ஒன்றை மோனிஷா விஜயகுமார் சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, “பெங்களூரு மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தில் நான் நடந்து வருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, காட்சிகள் இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக கேமராக்கள் மறைத்து வைக்கப்பட்டு அங்கே படப்பிடிப்பு நடப்பது போன்றே தெரியாமல் நடந்து கொண்டிருந்தது. அப்போது போதையில் இருந்த ஒரு நபர் என்னருகில் வந்து ஏதோ பேச முயன்றார். அவரது பார்வையே அச்சமூட்டுவதாக இருந்ததைப் பார்த்து நான் பயந்து போனேன்.

உடனடியாக அங்கே மறைந்து இருந்த படக்குழுவினர் மற்றும் எனது தந்தை ஆகியோர் வந்து அந்த நபரை பலவந்தமாக அப்புறப்படுத்தி நிலைமையை சீராக்கினர். இத்தனைக்கும் நான் கொஞ்சமும் கவர்ச்சி இல்லாத சல்வார் உடை தான் அணிந்திருந்தேன். அதனால் ஆடை ஒரு காரணம் என்று கூட சொல்லமுடியாது. பொது இடங்களில் இளம் பெண்களுக்கான பாதுகாப்பை கடுமையான சட்டங்கள் மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !