உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யா, நஸ்ரியா படத்தின் டைட்டில் 'சீனு'

சூர்யா, நஸ்ரியா படத்தின் டைட்டில் 'சீனு'


மலையாள இயக்குனர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் தற்போது சூர்யா நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக நீண்ட இடைவெளிக்கு பிறகு நஸ்ரியா நடிக்கிறார். இதனை ழகரம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மூலம் சூர்யாவே தயாரித்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்துக்கு 'சீனு' என தலைப்பிட திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் காவல்துறை அதிகாரியாக சூர்யா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் சூர்யா, சீனிவாசன் என்ற கேரக்டரில் நடிப்பதாகவும் அதன் சுருக்கமே சீனு என்றும், 'சீன் போடுதல்' என்ற சொற்றொடரை சுருக்கமாக குறிக்கும் வகையில் சீனு என்று வைக்கப்பட்டிருப்பதாகவும் இரண்டு விதமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

சுசின் ஷியாம் இசை அமைத்துள்ளார். திராவிட் செல்வம் வசனம் எழுதியுள்ளார். இப்படத்தினை தீபாவளிக்கு வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !