ஹாலிவுட்டில் கால் பதிக்கும் வித்யூத் ஜம்வால்
பிரபல பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வால். தமிழில் பில்லா 2, துப்பாக்கி, அஞ்சான், மதராஸி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பாலிவுட் படங்கள், தொடர்களில் நாயகனாகவும் நடித்து வரும் இவர் தற்போது 'ஸ்ட்ரீட் பைட்டர்' என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டில் கால் பதிக்கிறார்.
பாரமவுண்ட் பிக்சர்ஸ், லெஜண்டரி என்டர்டெயின்மெண்ட், கேப்காம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில், பிரபல யோகா குரு தல்சிம் கேரக்டரில் வித்யூத் ஜம்வால் நடித்துள்ளார். 1993ம் ஆண்டை பின்னணியாக கொண்ட இக்கதையில், பிரிந்து சென்ற போர் வீரர்களான ஆண்ட்ரூ கோஜி, நோவா சென்டினியோ மீண்டும் போர்க்களத்தில் களமிறங்க வேண்டிய சூழ்நிலை அமைகிறது. இந்த கொடூரமான போட்டியின் பின்னால், உயிருக்கு ஆபத்தான சதி திட்டம் மறைந்துள்ளது. அது ஆண்ட்ரூ கோஜி, நோவா சென்டினியோவை ஒருவருக்கு ஒருவர் எதிராக நிற்கவும், வழி செய்கிறது. இந்த வாழ்வா சாவா போட்டியில் வெல்வது யார் என்பதுதான் கதை.
கிடாவோ சகுராய் இயக்கியுள்ளார். நோகா சென்டினியோ, ஆண்ட்ரீவ் ஹோஹ்லி, கலியான லியாங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வரும் அக்டோபர் 16ம் தேதி படம் திரைக்கு வருகிறது.