சின்னத்திரை நடிகர் ஜெயமணி காலமானார்
ADDED : 9 hours ago
சின்னத்திரை நடிகர் ஜெயமணி (வயது 76) மாரடைப்பால் சென்னையில் காலமானார்.
சின்னத்திரையில் ‛மெட்டி ஒலி, திருமதி செல்வம்' போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானவர் ஜெயமணி. குறிப்பாக ‛திருமதி செல்வம்' என்ற தொடரில் பூங்காவனம் என்ற கேரக்டரில் நடித்து பேசப்பட்டார். 40 சீரியல்களை இயக்கி இருக்கிறார். தமிழில் ஆர்ஜே பாலாஜியின் ‛சொர்க்கவாசல்' உள்ளிட்ட ஓரிரு படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சங்கம், டப்பிங் சங்கத்திலும் உறுப்பினராக உள்ளார். கடைசியாக ‛சிறகடிக்க ஆசை' என்ற தொடரில் நடித்தார்.
சென்னை, வடபழனியில் வசித்து வந்த ஜெயமணி, மாரடைப்பால் காலமானார். இவருக்கு மாலதி என்ற மனைவியும், நந்தினி என்ற மகளும் உள்ளனர். மாலதி டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக உள்ளார். இறுதிச்சடங்கு நாளை நடைபெறுகிறது.