உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மாணவர் போராட்டத்தால் மன உளைச்சல் ; சோசியல் மீடியாவில் இருந்து தற்காலிகமாக விலகும் கங்கனா

மாணவர் போராட்டத்தால் மன உளைச்சல் ; சோசியல் மீடியாவில் இருந்து தற்காலிகமாக விலகும் கங்கனா


நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கடந்த சில நாட்களாக 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' என்கிற அமைப்பின் ஆதரவுடன் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அவரும் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் இந்த போராட்டத்தில் மாணவர்கள், மாணவர்கள் என்கிற பெயரில் பலர் செய்த செயல்களால் மன உளைச்சலுக்கு ஆளான பாலிவுட் நடிகையும், லோக்சபா எம்பியும் ஆன கங்கனா ரணாவத், சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலகி இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், என் வாழ்க்கையில் இவ்வளவு அருவருப்பான காட்சிகளை ஒரே இடத்தில் பார்த்ததில்லை. இந்த ஜென்-சி போராட்ட ரீல்ஸ்கள் வாந்தியை வரவழைக்கும் வகையில் இருக்கின்றன. அவர்கள் பேசும் விதமும், அவர்கள் செயல்பாடுகளும் 'இவர்களை யார் பெற்றெடுத்து வளர்க்கிறார்கள்' என்று கேட்கத் தோன்றுகிறது. உங்களை நீங்களே கரப்பான் பூச்சிகள் என்று அழைத்துக் கொள்வதோடு, அதைப் போலவே நடந்து கொள்கிறீர்கள். உலகத்திற்கு உங்கள் குப்பைகளையும், அருவருப்பையும் மட்டுமே வெளிப்படுத்துகிறீர்கள் என்று கூறியுள்ளதுடன் இந்த வைரல் வீடியோக்கள் தன் மனதை மிகவும் பாதித்துவிட்டதால், சில காலம் சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலகி நிற்கப் போவதாகவும் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !