உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வில்லன் அவதாரம் எடுக்கும் மோகன் ராஜா!

வில்லன் அவதாரம் எடுக்கும் மோகன் ராஜா!


படத்தொகுப்பாளர் மோகனின் மகன் மற்றும் ரவி மோகனின் அண்ணன் மோகன் ராஜா தமிழில் 'தனி ஒருவன், சந்தோஷ் சுப்பிரமணியம், உனக்கும் எனக்கும், ஜெயம்' உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர்.

கடந்த சில வருடங்களாக மோகன் ராஜா இயக்கத்தில் எந்த படமும் வெளிவரவில்லை. இது குறித்து எந்தவொரு காரணமும் தெரியவில்லை. தற்போது தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் நடிகர்கள் ஆகும் கலாசாரம் தொடங்கியுள்ளது. இந்த கலாசாரத்தில் மோகன் ராஜாவும் இணைகிறார்.

அதன்படி, சமீபத்தில் கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் 'தீராத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன்' ஆகிய படங்களை இயக்கிய திரு இயக்கத்தில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் புதிய படத்தில் நடிக்கின்றார். இதில் கதாநாயகியாக ஷிவானி ராஜசேகர் நடிக்கின்றார் என அறிவிப்புகள் வெளியானது. இப்போது இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மோகன் ராஜா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என புதிய தகவல் கிடைத்துள்ளது. இந்த கதாபாத்திரம் தனி ஒருவன் படத்தில் இடம்பெற்ற அரவிந்த்சாமி கதாபாத்திரம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளதால் இதில் மோகன் ராஜா பொருத்தமாக இருப்பார் என படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !