உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜனநாயகன், முதல் நாள் வசூல் எவ்வளவு ?

ஜனநாயகன், முதல் நாள் வசூல் எவ்வளவு ?

வினோத் இயக்கத்தில், விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' நேற்று வெளியானது. படத்திற்கு அவரது ரசிகர்கள், அமைச்சர்கள் மட்டும் நல்ல வரவேற்பு கொடுத்தனர். ஆனால், விமர்சகர்கள் படத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இந்நிலையில் முதல் நாள் வசூலில் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம் அந்த வசூல் சாதனையை எட்டுமா என்பது தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகே தெரியும்.

விஜய்யின் முதல் நாள் வசூலில் 'லியோ' படம் 148.5 கோடி வசூலித்து முதலிடத்தில் உள்ளது. ரஜினிகாந்த் நடித்த 'கூலி' படம் மொத்த தமிழ்ப் படங்களில் 151 கோடி வசூலித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இதனிடையே பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் கசிந்த தகவலின்படி 'ஜனநாயகன்' படம் முதல் நாள் வசூலாக 100 கோடிக்கும் குறைவாகத்தான் வந்துள்ளது என்கிறார்கள். இந்தியா அளவில் சுமார் 50 கோடியும், வெளிநாடுகளில் 30 கோடியும் வசூலித்து மொத்தமாக 80 கோடி இருக்கலாம் என்பது தகவல்.

படத்திற்கு 'ஏ' சான்றிதழ், மற்ற மொழிகளில் உடனே வந்த எதிர்மறையான விமர்சனம் மற்ற மாநில வசூலைப் பெரிதும் பாதித்துள்ளதாம். தமிழகத்தில் மட்டும் வசூல் நன்றாகவே இருந்து வருவதாகச் சொல்கிறார்கள்.

தயாரிப்பு நிறுவனம் முதல் நாள் வசூலாக அறிவிப்பை வெளியிடுமா என அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

குறிப்பு - வசூல் நிலவரங்கள் தயாரிப்பாளர்கள் சொல்வதுதான் ஆதாரப்பூர்வமானது. இங்கே குறிப்பிட்டுள்ள வசூல் நிலவரங்கள் சினிமா வட்டாரங்களில் பரவிய தகவல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !