உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஜனநாயகன்' புரமோசனில் தன்னை இணைத்துக் கொண்ட 'பகவந்த் கேசரி' இயக்குனர்

'ஜனநாயகன்' புரமோசனில் தன்னை இணைத்துக் கொண்ட 'பகவந்த் கேசரி' இயக்குனர்


நடிகர் விஜய் நடித்த கடைசி படம் மற்றும் அவர் முதல்வரான பிறகு வெளியாகும் படம் என்கிற பெருமையுடன் இன்று வெளியாகி உள்ளது ஜனநாயகன் திரைப்படம். வினோத் இயக்கத்தில் வெளியாகியுள்ள இப்படம், தெலுங்கில் சில வருடங்களுக்கு முன்பு பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் தான் என்பது கிட்டத்தட்ட அதிகாரப்பூர்வமாகவே சொல்லப்பட்டு விட்டது. ஆனாலும், அந்தப் படத்தின் முக்கியமான கருவை மட்டும் எடுத்துக்கொண்டு தமிழில் புதிதாக ஒரு விஷயத்தை இதில் சொல்லி இருக்கிறோம் என்று இயக்குனர் வினோத் கூறியுள்ளார்.

தற்போது இந்த படம் தெலுங்கில் 'ஜனநாயகடு' என்கிற பெயரில் வெளியாகி உள்ளது. ஆச்சரியமாக பகவந்த் கேசரி பட இயக்குனர் அனில் ரவிபுடியும், தெலுங்கில் ஜனநாயகன் தயாரிப்பாளர் வெங்கட் கே.நாராயணாவுடன் இணைந்து தெலுங்கு சேனல்களில் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். தனது படத்தின் கதைக்களம் விஜய்யின் திரைப்படத்திற்கு பயன்பட்டதில் பெருமகிழ்ச்சி அடைவதாக அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !