உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அக்., 1ல் திரைக்கு வரும் ஏழு கடல் ஏழு மலை படம்

அக்., 1ல் திரைக்கு வரும் ஏழு கடல் ஏழு மலை படம்

ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'ஏழு கடல் ஏழு மலை'. வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து சில வருடங்களைக் கடந்த நிலையில் பல்வேறு நாடுகளில் நடைபெறும் திரைப்பட விழாக்களுக்கு இந்த படத்தை அனுப்பி வைக்கப்பட்டது.

சமீபகாலமாக இந்த படத்தை இவ்வருடத்திற்குள் திரைக்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் இவ்வருட அக்டோபர் 1ம் தேதியன்று திரைக்கு வருகிறது என ரிலீஸ் தேதியை டீசர் உடன் அறிவித்துள்ளனர். இந்த ரிலீஸ் டீசரில் நிவின் பாலி, சூரி மற்றும் எலி சம்மந்தப்பட்ட காட்சிகள் நன்றாக உள்ளது. இந்த டீசர் ஒரு நல்ல திரை அனுபவத்திற்கு ரசிகர்களை தயார் செய்யும் வகையில் அமைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !