நான்கு பேருக்கு தேசிய விருது : 'ஓம்' படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்
சமீபத்தில் 72வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தற்போது படப்பிடிப்பில் இருக்கும் 'ஓம்' படக் குழுவினர் தான் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். காரணம், இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் மம்முட்டி, தனுஷ், படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, படத்தொகுப்பாளர் ஆர். கலைவாணன் ஆகியோர் தேசிய விருதுகளை பெற்றுள்ளனர். 'பிரம்மயுகம்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை மம்முட்டியும், 'கேப்டன் மில்லர்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான சிறப்பு ஜூரி விருதை தனுஷும், 'அமரன்' படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான விருதை ராஜ்குமார் பெரியசாமியும், அதே படத்திற்காக சிறந்த தொகுப்பாளராக ஆர்.கலைவாணனும் வென்றுள்ளனர்.
இந்த நால்வருமே தற்போது உருவாகி வரும் 'ஓம்' படத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நால்வரும் தேசிய விருது பெற்ற மகிழ்ச்சியை ஓம் படப்பிடிப்புத் தளத்தில் கேக் வெட்டி உற்சாகமாகக் கொண்டாடியுள்ளனர். இது குறித்த புகைப்படங்களை நடிகர் மம்முட்டி தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டு, எங்கள் தேசிய விருது வெற்றியை ஓம் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் சிறிய அளவில் கொண்டாடினோம். அனைத்து அன்பிற்கும் நல்வாழ்த்துகள், நன்றி என்று கூறியுள்ளார்.