ஜெயிலர் 2 தெலுங்கு உரிமை இத்தனை கோடியா...?
ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‛ஜெயிலர் 2'. இதன் முதல் பாகமான ஜெயிலர் பிளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்றதால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அக்டோபர் 15-ல் திரைக்கு வரும் இப்படத்தின் வியாபாரம் தொடங்கியுள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரஜினிகாந்திற்கு இருக்கும் மார்க்கெட்டை மனதில் வைத்து, இப்படத்தின் தயாரிப்பாளர்கள் தெலுங்கு தியேட்டர் உரிமத்திற்கு 60 கோடி ரூபாய் வரை கேட்பதாகக் கூறப்படுகிறது.
ஆனால் தெலுங்கு விநியோகஸ்தர்களோ, தற்போதைய ரஜினியின் மார்க்கெட் இவ்வளவு பெரிய தொகைக்கு சாதகமாக இல்லை என்று கூறி, தொகையைக் குறைக்குமாறு தயாரிப்பாளர்களிடம் கேட்டு வருவதாகத் தெரிகிறது. குறிப்பாக, ரஜினியின் கூலி படம் தெலுங்கு பாக்ஸ் ஆபீஸில் 35 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. அந்த படத்தில் நாகார்ஜுனா வில்லனாக நடித்திருந்தும் தெலுங்கில் எதிர்பார்த்தபடி வசூலிக்கவில்லை. அதனால்தான் ஜெயிலர் 2 படமும் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறாமல் போனால் நஷ்டத்தை ஏற்படுத்தி விடும் என்பதனால்தான் அங்குள்ள விநியோகஸ்தர்கள் 60 கோடிக்கு வாங்க தயங்கி வருவதாக கூறப்படுகிறது.
ஜெயிலர் முதல் பாகத்தில் ஓய்வு பெற்ற ஜெயிலராக அமைதியான வாழ்க்கையைத் தேடிய முத்துவேல் பாண்டியன், இந்த இரண்டாம் பாகத்தில் சர்வதேச அளவில் நடக்கும் கடத்தல் கும்பல்களுக்கு எதிராகவும், தனது குடும்பத்தை காக்கவும் இன்னும் மிரட்டலான ஆக்ஷன் அவதாரத்தை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.