உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓடிடியில் டிரெண்ட் ஆகும் சமந்தாவின் மா இன்ட்டி பங்காரம்

ஓடிடியில் டிரெண்ட் ஆகும் சமந்தாவின் மா இன்ட்டி பங்காரம்

சமந்தா நடிப்பில் வெளியான மா இன்ட்டி பங்காரம்(தமிழில் எங்கள் தங்கம்) படம் வெற்றியைப் பெற்றுள்ளது. நந்தினி ரெட்டி இயக்கிய இந்த ஆக்ஷன் டிராமா படம் உலகளவில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இப்படத்தில் சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, குல்ஷன் தேவ்வய்யா, கௌதமி, ஸ்ரீமுகி மற்றும் சைதன்யா கிருஷ்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தியேட்டர் ரிலீஸைத் தொடர்ந்து, மா இண்டி பங்காரம் படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பல மொழிகளில் வெளியானது. இந்த ஸ்ட்ரீமிங் தளத்திலும் படத்திற்கு மிகச்சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளதோடு, தற்போது ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும், இப்படம் ஸ்ட்ரீமிங் சாதனைகளை முறியடித்து வருவதாகவும், இதன் அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஜியோ ஹாட் ஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமந்தா மற்றும் இயக்குனர் நந்தினி ரெட்டி இணைந்த மூன்றாவது படம் இதுவாகும். இதற்கு முன்பு இவர்கள் கூட்டணியில் ஜபர்தஸ்த், ஓ பேபி ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. வழக்கமான காதல் அல்லது குடும்பக் கதையாக இல்லாமல், இதில் ஒரு நடுத்தர வர்க்கப் பெண்ணாக, தனது குடும்பத்தைக் காக்க ஆக்ஷன் அவதாரம் எடுக்கும் மிகவும் தைரியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார் சமந்தா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !