உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 38 வருடங்களுக்குப் பிறகு கணவரின் டைரக்ஷனில் நடித்த நடிகை லிசி

38 வருடங்களுக்குப் பிறகு கணவரின் டைரக்ஷனில் நடித்த நடிகை லிசி


பிரபல மலையாள இயக்குநர் பிரியதர்ஷன். இவரது மனைவி நடிகை லிசி லட்சுமி. தமிழில் 'விக்ரம்', 'மனசுக்குள் மத்தாப்பு' உள்ளிட்ட படங்களில் நடித்த லிசி, பிரியதர்ஷனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார்கள். ஆனாலும் ஒருவருக்கொருவர் அனுசரணையாகவே இருந்து வந்தார்கள். இந்த நிலையில், சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் இவர்கள் இணைந்து கணவன்-மனைவியாக வாழத் தொடங்கியுள்ளனர்.

பிரியதர்ஷன் இயக்கத்தில் 1988-ல் மோகன்லால் நடிப்பில் வெளியான 'சித்ரம்' படத்தில் கதாநாயகியாக லிசி நடித்திருந்தார். இந்த நிலையில், தற்போது பிரியதர்ஷன் 'கல்யாண் ஜுவல்லர்ஸ்' நிறுவனத்திற்காக பிரியதர்ஷன் இயக்கியுள்ள விளம்பரப் படத்தில் 38 வருடங்களுக்குப் பிறகு லிசியும் ஒரு முக்கிய நட்சத்திரமாக நடித்துள்ளார். லிசி மட்டுமல்ல, இவர்களது மகள் கல்யாணி பிரியதர்ஷனும் இதில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !