பிளாஷ்பேக் : சினிமாவான மு.வரதராசாரின் நாவல்
ADDED : 6 hours ago
தமிழ் இலக்கிய உலகில் புகழ் பெற்ற எழுத்தாளராக இருந்தவர் 'மு.வ' என சுருக்கமாக அழைக்கப்பட்ட மு.வரதராசனார். இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் போன்றவை மட்டுமின்றி பல சிறுகதைகள், நாவல்களும் எழுதியுள்ளார்.
இவர் எழுதிய 'பெற்ற மனம்' என்ற நாவல் திரைப்படமாக தயாரிக்கப்பட்டது. பீம்சிங் இயக்கத்தில் நேசனல் பிக்சர்ஸ் நிறுவனத்தினர் இதனைத் தயாரித்திருந்தனர். சிவாஜி, புஷ்பவல்லி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், பத்மினி ஆகியோர் நடித்தனர்.
இந்த கதை தமிழில் தயாரிக்கப்படுவதற்கு முன்பே 1953ல் 'பெம்புடு கொடுக்கு' என்ற பெயரில் தெலுங்கில் தயாரானது. ஏழு வருடங்களுக்குப் பிறகு தமிழில் தயாராகி வெளிவந்து. தெலுங்கில் வரவேற்பு பெற்ற இந்த படம் தமிழில் போதிய வரவேற்பை பெறவில்லை.