உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சாந்தனுவின் 'பல்டி' திடீர் ஓடிடி ரிலீஸ் : பாக்யராஜ் மறைவின் அனுதாப அலை காரணமா?

சாந்தனுவின் 'பல்டி' திடீர் ஓடிடி ரிலீஸ் : பாக்யராஜ் மறைவின் அனுதாப அலை காரணமா?

இந்தியத் திரையுலகின் 'திரைக்கதை மன்னன்' என அழைக்கப்படும் நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ், சமீபத்தில் மாரடைப்பால் காலமானார். தமிழகம் தாண்டி, பிற மொழி திரையுலகைச் சேர்ந்தவர்களும் ரசிகர்களும் அவருக்கு தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பாக்யராஜின் மகன் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான 'பல்டி' என்கிற திரைப்படம், தற்போது வரும் ஜூலை 10-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

பல நாட்களாகக் கிடப்பில் இருந்த இந்தப் படம், திடீரென வெளியாக காரணம் பாக்யராஜின் மறைவு ஏற்படுத்திய ஒரு அனுதாப அலை என்று சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம், இந்தப் படத்தில் மற்றொரு கதாநாயகனாக நடித்திருந்த மலையாள நடிகர் சேன் நிகம் நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரிதம் என்கிற திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது; அதன் காரணமாகவே இந்த படத்தை தற்போது ஓடிடியில் ரிலீஸ் செய்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !