உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'நான் மகான் அல்ல படம்' நான் பண்ண வேண்டியது! - விஷ்ணு விஷால்

'நான் மகான் அல்ல படம்' நான் பண்ண வேண்டியது! - விஷ்ணு விஷால்


நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள 'கட்டா குஸ்தி' படம் ஜூலை 3ம் தேதியன்று திரைக்கு வருகிறது. இதையொட்டி இந்த படத்தின் புரமோஷனுக்காக பிஸியாக யூடியூப்பில் பல சேனலுக்கு பேட்டி அளித்து வருகிறார். அப்படி ஒரு பேட்டியில் தற்போது தனது ஆரம்ப காலகட்டம் குறித்து விஷ்ணு விஷால் கூறியதாவது, சினிமா வாய்ப்பு தேடி 7 வருடங்கள் பல கம்பெனி ஏறி இறங்கினேன். அந்த காலகட்டத்தில் 'காதல், டிஷ்யூம், ஆனந்த தாண்டவம், நான்' உள்ளிட்ட படங்களில் முதலில் நான் நடிப்பதாக இருந்தது. பின்னர் வேறு கதாநாயகர்கள் நடித்தனர்.

அதன் பின்னர் சினிமா வேண்டாம் என்று முடிவு செய்து ஐ.டி துறைக்கு சென்றேன். அதன் பிறகு என்னை தேடி வந்த வாய்ப்பு 'வெண்ணிலா கபடிக் குழு' படம். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு எனக்கு இரண்டாவது படமாக 'நான் மகான் அல்ல' படம் நடிக்க வேண்டியது. ஒரு சில காரணங்களால் அது நடக்கவில்லை. ஒருவேளை என் இரண்டாவது படமாக 'நான் மகான் அல்ல' படம் அமைந்திருந்ததால் என் திரைப்பயணம் அங்கேயே வேறு மாதிரி தொடங்கி இருக்கும். எனத் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !