வீட்டு பணிபெண்ணை சிறை பிடித்தாரா ரவிமோகன்: போலீஸ் விசாரணை
நடிகர் ரவிமோகன் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய வழக்கு தொடர்ந்துள்ளார். மனைவி மீது ஏகப்பட்ட புகார்களையும் கூறியிருந்தார். அவரது தோழியும், பாடகியுமான கெனீஷாவுடன் வாழ்ந்து வந்தார். தற்போது அவரையும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.
ரவிமோகன் தற்போது சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் ரவிமோகனின் வீட்டில் பணிசெய்யும் பெண்னின் கணவர், ரவிமோகன் வீட்டிற்கு வேலைக்கு சென்ற தன் மனைவி மற்றும் மகன் இருவரும் இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை, அவர்களை ரவிமோகன் சிறைபிடித்து வைத்துள்ளார் என்று நீலாங்கரை போலீசில் புகார் அளித்தார்.
இதை தொடர்ந்து ரவிமோகன் வீட்டிற்கு சென்ற போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார். அப்போது தனது வீட்டில் இருந்த 40 ஆயிரம் ரூபாயை காணவில்லை அது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தியதாக ரவிமோகன் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து போலீசார். பணம் காணவில்லை என்றால் போலீசில்தான் புகார் செய்ய வேண்டும் பணிப்பெண்ணை தனிப்பட்ட முறையில் விசாரிப்பது சட்டவிரோதம் என்று அறிவுறுத்தி அந்த பெண்ணையும், அவரது மகனையும் அவர்களின் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
பணம் காணாமல் போனது குறித்து ரவிமோகன் புகார் எதுவும் அளிக்காததால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல அந்த பணிபெண்ணும் ரவிமோகன் மீது எந்த புகாரும் அளிக்கவில்லை. பணம் காணாமல் போகவில்லை என்றும் வீட்டில் இருந்த சில டாக்குமெண்டுகள் காணாமல் போயிருப்பதாகவும், அதை பணிப்பெண் எடுத்து தன் மனைவி ஆர்த்தியிடம் கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அடிப்படையில் ரவிமோகன் பணிபெண்ணிடம் விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.