4 நாட்களில் 50 கோடி வசூலை கடந்த சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்'
ADDED : 9 hours ago
நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா நடிப்பில் கடந்த 19ம் தேதி திரைக்கு வந்த படம் 'மா இண்டி பங்காரம்'. இப்படம் தமிழில் 'எங்கள் தங்கம்' என்ற பெயரில் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இந்த படம் திரைக்கு வந்த கடந்த நான்கு நாட்களில் உலகம் முழுவதும் 50 கோடிக்கும் அதிகமான வசூலை கடந்து இருக்கிறது.
இந்த படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்ததோடு இந்த வாரம் வேறு பெரிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதால் வரும் நாட்களில் இப்படம் தனது வெற்றிகரமான ஓட்டத்தை இன்னும் பெரிய அளவில் தொடரும் என்று எதிர்பார்க்கிறது. இந்தப் படத்தில் சமந்தாவுடன் குல்சன் தேவையா, கவுதமி தடிமல்லா மற்றும் ஸ்ரீ முகி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை சமந்தாவே தயாரித்துள்ளார்.