கர்ப்பம் குறித்த வதந்திகளை தூண்டிய சமந்தாவின் தோற்றம்!
சமந்தா நடிப்பில் தற்போது திரைக்கு வந்துள்ள படம் 'மா இண்டி பங்காரம்'. இப்படம் தமிழில் 'எங்கள் தங்கம்' என்ற பெயரில் வெளியாகி உள்ளது. ஆரம்பத்திலேயே வலுவான வசூலுடன் தொடங்கியுள்ள இந்த படம், முதல் வார இறுதியில் மிகப்பெரிய வெற்றி படமாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை அடுத்து மகிழ்ச்சி அடைந்துள்ள சமந்தா, நேற்று நடைபெற்ற வெற்றி விழாவில் கலந்து கொண்டார். அங்கு படக்குழுவினர் மற்றும் தனது கணவர் ராஜ் நிடிமொருவுடன் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்கள். இந்த விழாவுக்கு வந்தபோது சமந்தா வெள்ளை நிற டீசர்ட் அறிந்திருந்தார். அப்போது அவரது வயிற்றுப் பகுதி சற்று பருமனாக தெரிந்ததால் அவர் கர்ப்பமாக இருக்கலாம் என்று யூகித்து இணையத்தில் பலரும் செய்தி பரப்பி விட்டார்கள். இது சமூக ஊடகங்களில் விவாதங்களை உருவாக்கி இருக்கிறது.
சமந்தா முதல் குழந்தையை எதிர்பார்க்கிறார் என்று ஊடகங்களில் ஒரு பரபரப்பு செய்தி வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் இது குறித்து சமந்தாவோ அல்லது அவரது குடும்பத்தினரோ எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.