கேரளா பாக்ஸ் ஆபீஸில் 'கருப்பு' படத்தை பின்தள்ளிய அர்ஜுனின் 'பிளாஸ்ட்'
ஆர்.ஜே .பாலாஜி இயக்கத்தின் சூர்யா நடித்த மே 15ம் தேதி திரைக்கு வந்த படம் 'கருப்பு'. இந்த படம் இதுவரை 300 கோடியை கடந்து வசூலித்து இருக்கிறது. அதோடு சூர்யா நடித்து திரைக்கு வந்த படங்களில் அதிகம் வசூலித்த முதல் படமாகி உள்ளது. அதேபோல் அர்ஜுன் நடிப்பில் கடந்த மே 28ம் தேதி திரைக்கு வந்த படம் பிளாஸ்ட். இந்த படத்தை சுபாஷ் கே.ராஜ் இயக்கியுள்ளார். இப்படம் தமிழில் 70 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது.
இந்நிலையில், மலையாளத்திலும் வெளியிடப்பட்ட 'கருப்பு, பிளாஸ்ட்' ஆகிய இந்த இரண்டு படங்களுமே பெரிய அளவில் வசூலித்துள்ளன. குறிப்பாக சூர்யாவின் கருப்பு படம் கேரளாவில் 14 கோடி வசூலித்துள்ள நிலையில், அர்ஜுனின் பிளாஸ்ட் படமோ அதைவிட ஒரு கோடி அதிகமாக 15 கோடி ரூபாய் வசூல் செய்து இருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் தெரிவிக்கிறது. இந்த படத்தில் அர்ஜுனுடன் அபிராமி, பிரீத்தி முகுந்தன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.