உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அடுத்த வாரிசு… இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித் கதாநாயகனாக அறிமுகம்

அடுத்த வாரிசு… இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித் கதாநாயகனாக அறிமுகம்

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டப் படங்களின் இயக்குனர் என பிரபலமடைந்தவர் ஷங்கர். அவர் கடைசியாக தமிழில் இயக்கிய 'இந்தியன் 2', தெலுங்கில் இயக்கிய 'கேம்சேஞ்ஜர்' ஆகிய இரண்டு படங்களும் தோல்வியடைந்தன. அடுத்து ஷங்கர் என்ன படம் இயக்கப் போகிறார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதனிடையே, ஷங்கர் குடும்பத்திலிருந்து அடுத்த வாரிசு சினிமாவிற்குள் வருகிறது. ஏற்கெனவே ஷங்கர் மகள் அதிதி சில படங்களில் கதாநாயகியாக நடித்தார். தற்போது ஷங்கரின் மகன் அர்ஜித் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

அட்லீயின் உதவியாளர் அசோக் இயக்கும் இப்படத்தின் பூஜை நேற்று எளிமையாக நடைபெற்றது. சினிமா பிரபலங்கள் வந்து வாழ்த்தியுள்ளனர். முக்கியமாக முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் வந்து வாழ்த்தியதுதான் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகி குறுகிய காலத்தில் முடிவடைய உள்ளதாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !