உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'பெத்தி' : தயாரிப்பாளர் மற்றும் தியேட்டர் அதிபர்கள் மோதல்?

'பெத்தி' : தயாரிப்பாளர் மற்றும் தியேட்டர் அதிபர்கள் மோதல்?


தெலுங்குத் திரையுலகத்தில் இனிமேல் வாடகை முறையில் படங்களைத் திரையிட மாட்டோம், சதவீதப் பங்கு அடிப்படையில் மட்டுமே திரையிடுவோம் என தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்திருந்தனர்.

ராம் சரண் நடித்த 'பெத்தி' படத்திற்கு இதன் காரணமாக சிக்கல் எழுந்தது. ராம் சரண் அப்பா சிரஞ்சீவி இந்த விவகாரத்தில் இறங்கி பேச்சுவார்த்தை நடத்தி சிக்கலைத் தீர்த்து வைத்ததாகச் சொல்ப்பட்டது.

இந்நிலையில் 'பெத்தி' படத்தை சதவீதப் பங்கு அடிப்படையில் திரையிடாமல் வாடகை முறையில் திரையிடுமாறு தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினரை தெலுங்கு பிலிம் சேம்பர் கேட்டுக் கொண்டது. அதோடு கிடைக்கும் வருவாயில் கூடுதலாக 7.5 சதவீதத்தை வழங்குவோம் என உறுதி அளித்திருந்தது.

ஆனால், தற்போது படத்தின் தயாரிப்பாளர் சதீஷ் கிலாரு, தான் அப்படியான எந்த ஒரு ஒப்பந்தத்தையும் போடவில்லை, அது பற்றி தனக்கு எதுவும் தெரியாது, தான் அதில் ஒரு பகுதியாக இல்லை என்று கூறி தியேட்டர் உரிமையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

இதனால், அவருக்கும் தியேட்டர் அதிபர்களுக்கும் இடையே மோதல் எழுந்துள்ளதாகத் தெரிகிறது. தங்களுக்குச் சேர வேண்டிய 7.5 சதவீதத் தொகையைக் கொடுத்தே ஆக வேண்டும் என்று தியேட்டர் அதிபர்கள் கறாராக கூறி வருகிறார்களாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !