ஓடிடியில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்த துரந்தர் 2
ADDED : 4 days ago
ஹிந்தியில் ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் நடந்த மார்ச் மாதம் திரைக்கு வந்த படம் துரந்தர் 2. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 1800 கோடி வசூலித்து சாதனை செய்தது. இப்படம் கடந்த வாரத்தில் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி முதல் வார இறுதியில் இதுவரை 50 மில்லியன் பார்வையாளர்களை அடைந்துள்ளது. இதன் மூலம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான படங்களில் முதலிடத்தை பிடித்திருக்கிறது துரந்தர் 2. அந்த வகையில் தியேட்டரை போலவே ஓடிடியிலும் துரந்தர் 2 நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.