நடிகையை பிளாக்மெயில் செய்த பாய் பிரண்ட்
தளபதி நடிகருடன், இரண்டு படங்களில் நடித்த அந்த, பீஸ்ட் நடிகை, தன் மும்பை பாய் பிரண்டுடன் அடிக்கடி, 'டேட்டிங்' சென்று வந்தார். ஆனால், அந்த நபரோ அம்மணியுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளை வீடியோ எடுத்ததோடு, 'தனக்கு உடனடியாக, 5 கோடி ரூபாய் தர வேண்டும். இல்லை என்றால், இந்த வீடியோக்களை, 'சோஷியல் மீடியா'வில் வெளியிட்டு விடுவேன்...' என்று அம்மணியை, 'பிளாக் மெயில்' செய்து, பேரதிர்ச்சி கொடுத்து விட்டார்.
நம்பிய காதலனே, வில்லன் ஆகிவிட்டதால், உச்சகட்ட அதிர்ச்சியடைந்த, பீஸ்ட் நடிகை, பின்னர் தன் அபிமானிகள் சிலரை அழைத்து சென்று, அந்த பாய் பிரண்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இரண்டு கோடி ரூபாய், 'டீல்' பேசி, அவர் வைத்திருந்த ரகசிய வீடியோவை கைப்பற்றி உள்ளார். இந்த செய்தி சினிமா வட்டாரங்களில் கசிந்ததை அடுத்து, பாய் பிரண்டுடன், 'டேட்டிங்' செய்து வரும் அத்தனை நடிகையருமே பீதி அடைந்துள்ளனர்.