உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரத்தம் தெறிக்கும் டிசி படத்தின் டிரைலர்

ரத்தம் தெறிக்கும் டிசி படத்தின் டிரைலர்

ரஜினி நடிப்பில் கூலி படத்தை இயக்கிய பிறகு டிசி என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவருக்கு ஜோடியாக வாமிகா கபி நடிக்க, அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். இந்த படத்தின் புரமோ கடந்த காதலர் தினத்தில் வெளியிடப்பட்டது. சமீபத்தில் டிசி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் டிசி படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. கேன்ஸ் திரைப்பட விழாவில் இதனை வெளியிட்டுள்ளனர். அதில் , ஏற்கனவே அருண் மாதேஸ்வரன் இயக்கிய சாணிக்காகிதம் பட பாணியில் வன்முறை மற்றும் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்று இந்த டிரைலரில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தில் நடித்து முடித்ததை அடுத்து அல்லு அர்ஜுன் நடிப்பில்தான் இயக்கப் போகும் புதிய படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !