உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : கேரக்டருக்காக செத்துப்போன கருப்பு சுப்பையா

பிளாஷ்பேக் : கேரக்டருக்காக செத்துப்போன கருப்பு சுப்பையா

1980களில் கவுண்டமணி, செந்தில் காமெடிகள் கொடிகட்டிப் பறந்த காலத்தில் அவர்களுடன் நடித்து புகழ்பெற்றவர் கருப்பு சுப்பையா. ஏற்கெனவே வெள்ளை சுப்பையா என்று ஒருவர் இருந்ததால் இவர் தனது பெயரை கருப்பு சுப்பையா என்று வைத்துக் கொண்டார். கவுண்டமணி செந்தில் கூட்டணியில் 80 படங்களில் நடித்துள்ளார்.

ஆரம்ப காலத்தில் பழனிச்சாமி, எங்க ஊரு பாட்டுக்காரன் போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். அதன் பின்னர் பெரிய மருது, ஜல்லிக்கட்டு காளை, கட்டபொம்மன், செந்தூர பூவே, பட்டத்துராணி உள்ளிட்ட படங்களில் சற்று பெரிய ரோலில் நடித்தார். கவுண்டமணியின் கார் டிரைவருக்கு கொடுக்கப்படும் பேட்டா அளவில்தான் சுப்பையாவிற்கு சம்பளம். அதாவது 300 ரூபாய்.

பெரிய மருது படத்தில் கவுண்டமணியும், செந்திலும் ஈயம் பூசும் தொழில் செய்பவர்களாக வருவார்கள். அப்போது தன்னிடம் இல்லாத அண்டாவிற்கு ஈயம் பூச எவ்வளவு செலவாகும் என கருப்பு சுப்பையா கேட்க, கடுப்பாகும் கவுண்டமணியும் செந்திலும் அவருக்கு ஈயம் பூசிவிடுவார்கள். இந்த காட்சி ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.

ஆனால் இந்த காட்சி படமாகும்போது அவருக்கு நிஜமான பெயிண்டையே பூசி உள்ளனர். அந்த பெயிண்டுடனேயே நடித்தார் சுப்பையா. இதன் காரணமாக பெயிண்டில் உள்ள கெமிக்கல்கள் அவரது உடலுக்குள் சென்று பின்னாளில் பலவித பிரச்னைகளை ஏற்படுத்தியது. கடைசி காலத்தில் பட வாய்ப்புகள் இல்லாமலும், கவனிக்க ஆள இல்லாமலும், 2013ம் ஆண்டு இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

சசிக்குமார் திருப்பூர்
2026-05-12 16:33:40

இதே பின்விளைவுகள் ரோபோ சங்கர்