உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தேவிஸ்ரீ பிரசாத்திற்கு ஜோடி மிருணாள் தாக்கூரா.?

தேவிஸ்ரீ பிரசாத்திற்கு ஜோடி மிருணாள் தாக்கூரா.?

தெலுங்கில் வேணு எல்டன்டி இயக்கும் படம் யெல்லம்மா. இதில் முதலில் நானியும், நிதினும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. கிராமத்து கதையில் உருவாகும் இந்த படத்தில் இருந்து பின்னர் அவர்கள் விலகி விட்டார்கள். அவர்களை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் கமிட்டாகியுள்ளார். முன்னதாக இதில் சாய் பல்லவி அல்லது கீர்த்தி சுரேஷ் ஆகியோரில் ஒருவர் கதாநாயகியாக நடிப்பார்கள் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது இந்த படத்தில் சீதா ராமம் படத்தில் நடித்த மிருணாள் தாக்கூர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத்தே இசையமைக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !