உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / உன்னி கிருஷ்ணன் ராஜினாமா ஏற்க மறுப்பு : மீண்டும் 'பெப்கா' பொதுச்செயலாளராக தொடர்கிறார்

உன்னி கிருஷ்ணன் ராஜினாமா ஏற்க மறுப்பு : மீண்டும் 'பெப்கா' பொதுச்செயலாளராக தொடர்கிறார்

மலையாள திரையுலகில் பெப்கா என அழைக்கப்படும் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளராக கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக தொடர்ந்து பொறுப்பு வகித்து வருபவர் பிரபல இயக்குனர் பி உன்னிகிருஷ்ணன். மோகன்லாலை வைத்து கிட்டத்தட்ட ஐந்து படங்களை தொடர்ந்து இயக்கி அவரது ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் இவர் இயக்குனர் சங்கத்திலும் பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்தவர்.

இந்த நிலையில், தான் நீண்ட நாட்கள் பொதுச் செயலாளர் பதவி வகித்து வருவதாலும் தொழிலாளர் சம்மேளனத்தின் அமைப்பை வலுவாக உருவாக்கி விட்டதால் இனி தன்னுடைய இருப்பு அங்கே கட்டாயம் தேவைப்படாது என்றும் புதியவர்கள் பொறுப்புக்கு வரட்டும் என்றும் கூறி தனது பர்சனல் காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பினார் இயக்குனர் உன்னிகிருஷ்ணன்.

ஆனால் இயக்குனர் சிபி மலையில் தலைவராக இருக்கும் இந்த சம்மேளனத்தின் பொதுக்குழு கூடி பி.உன்னிகிருஷ்ணனின் ராஜினாமாவை ஏற்க மறுத்து விட்டது. இப்போது சங்கத்திற்கு புதியவர்கள் தலைமை தேவை இல்லை என்றும் உன்னி கிருஷ்ணனே தொடர்ந்து பொறுப்பேற்று சம்மேளனத்தை நடத்த வேண்டும் என்றும் பொதுக்குழு தீர்மானம் இயற்றியதால், வேறு வழியின்றி அதற்கு கட்டுப்பட்டு மீண்டும் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ளார் இயக்குனர் உன்னிகிருஷ்ணன். இவர் பொறுப்பில் இருந்த காலகட்டத்தில் தொழிலாளர்களின் சார்பாக தொடர்ந்து பல நல்ல விஷயங்களை செய்து வருவதால் தான் சம்மேளனம் இவரை வெளியேற விடாமல் தடுத்து நிறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !