மலையாளத்தில் ஏமாற்றம் தந்த படம்
ADDED : 19 hours ago
மலையாளத்தில் டொவினோ தாமஸ் ஜோடியாக கயாடு லோஹர் நடித்த பள்ளிச்சட்டம்பி படம் கடந்த வாரம் வெளியானது. இந்த படத்தை பெரிதும் நம்பியிருந்தார் கயாடு. படம் ஹிட்டானால் மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் தனக்கு நல்ல பெயர் கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால், பள்ளிச்சட்டம்பி படம் தோல்வி அடைந்துவிட்டது. அவர் நடிப்பு, கேரக்டரையும் யாரும் பாராட்டவில்லை. இதனால், தெலுங்கு, தமிழில் கவர்ச்சியாக நடிக்கலாமா என யோசிக்கிறாராம்.
தமிழிலும் அதர்வா ஜோடியாக அவர் நடித்த இதயம் முரளி, ஜி.வி.பிரகாசுடன் நடித்த இம்மார்ட்டல் ஆகிய படங்கள் ரிலீஸில் தாமதமாகி உள்ளது. தெலுங்கிலும் அவருக்கு பெரிய மார்க்கெட் உருவாகவில்லை. சோஷியல் மீடியாவில் அவரை கொண்டாடுகிறார்கள். ஆனாலும் சினிமாவில் இடம் கிடைக்காதது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாம்.