முதல் படத்திலேயே கடனாளியான வாரிசு
ADDED : 4 hours ago
நாட்டாமை நடிகரின் வாரிசு, இயக்குனர் அவதாரம் எடுத்து, தெலுங்கில், ஒரு படம் தயாரித்து, இயக்கி, நடித்து வெளியிட்டார். ஆனால், அந்த படமோ தியேட்டர்களில், ஈ ஆடியதோடு தியேட்டர் வாடகைக்கு கூட வசூலிக்கவில்லை. இதனால், படம் தயாரித்த செலவு, படத்தை தியேட்டரில் ஓடவைத்த செலவு என, ஆத்துக்காரரின் காசை கரைத்துள்ளார்,
நடிகை. ஆனால், படம் தயாரித்து, இயக்கிய தன் மனைவி அதை டபுளாக கொடுப்பார் என்று எதிர்பார்த்த அவரது ஆத்துக்காரர், முதலுக்கே மோசமாகி விட்டதால் அம்மணியிடம் கொந்தளித்து விட்டார். அதோடு, 'நான் கொடுத்த பணத்தை புதிய படங்களில் நடித்து, வட்டியும் முதலுமாக திருப்பி கொடுத்துவிட வேண்டும்...' என்றும், 'கட் அன்ட் ரைட்'டாக சொல்லிவிட்டார். இதனால், முதல் படத்திலேயே பெரும் கடனாளியாகியுள்ளார், நாட்டாமையின் வாரிசு.