வீட்டை 100 கோடிக்கு விற்றாரா மீனா? தவறான தகவல் பரவுவதாக விளக்கம்
சென்னை சைதாப்பேட்டை கோர்ட் பின்னால் இருக்கும் ஸ்ரீராம்காலனியில் பல ஆண்டுகளாக வசிக்கிறார் மீனா. சென்னை சாலிகிராமத்தில் ஆரம்பத்தில் வசித்து வந்தவர், பின்னர் அந்த வீட்டுக்கு மாறினார். அவரின் சைதாப்பேட்டை வீடு கேரள ஸ்டைலில் அழகாக கட்டப்பட்டு உள்ளது. சமீபத்தில் அந்த வீட்டை மீனா விற்றுவிட்டார். 10 கோடிக்கு அந்த இடத்தை வாங்கி வீடு கட்டினார்.
இப்போது வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் அந்த வீட்டின் அழகில் மயங்கி 100கோடிக்கு வாங்கியுள்ளனர். அந்த வீட்டை விற்று பல கோடி லாபம் சம்பாதித்துவிட்டார் மீனா என தகவல் பரவுகிறது. மீனாவின் திறமையை பல வெப்சைட்களில், சோஷியல் மீடியாவில் பாராட்டி வருகிறார்கள். இது உண்மையா? அந்த வீட்டை விற்றுவிட்டு மீனா எங்கே வசிக்கிறார் என அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தால், 'இது தவறான தகவல். யார் கிளப்பினார்கள் என தெரியவில்லை. சென்டிமென்ட்டாக அந்த வீடு மீனாவுக்கு நெருக்கமானது. அதை எப்படி விற்பார். தவிர, அந்த வீட்டின் மதிப்பு 100 கோடிக்கு போகாது. அவ்வளவு பெரிய வீடு இல்லை. யாரோ தவறாக செய்தி பரப்புகிறார்கள். தனதுக்கு சொந்தமான ஒரு பெரிய நிலத்தைதான் மீனா விற்றார். அதைதான் இப்படி மாற்றி பேசுகிறார்கள். இப்போதும் அந்த வீட்டில்தான் மீனா வசிக்கிறார். இப்போது வெளிநாடு சென்று இருக்கிறார். சோஷியல் மீடியாவில் பரவும் தகவல்களை உண்மை என நம்பி, பலரும் அதை பரப்பி வருகிறார்கள்' என்று அந்த தரப்பு சொல்கிறது.