நடிகர் விஜய் மனைவி பிரஸ்மீட் அடுத்த வாரம் நடக்குதா?
நடிகர் விஜய்க்கும், அவர் மனைவி சங்கீதாவுக்குமான பிரச்னை கோர்ட் வரை வந்துவிட்டது. விவகாரத்து கேட்டு செங்கல்பட்டு கோர்ட்டில் அவர் மனைவி வழக்கு தாக்கல் செய்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக விஜயால் தனக்கு என்னென்ன பிரச்னை என்று அதில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். ஒரு நடிகைக்கும் அவருக்கும் தொடர்பு. அதனால், தங்கள் குடும்ப வாழ்வில் சிக்கல் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பாக மீடியாவை சந்திப்பார் விஜய் மனைவி சங்கீதா. அதில் இன்னும் பல அதிரடி தகவல்களை சொல்வார் என்று பேசப்பட்டது. இப்போது அடுத்த வாரம் மீடியாவை சந்திக்கலாம் என்று ஒரு தரப்பினர் கிளப்பிவிட்டுள்ளனர். ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் என்பதால் அடுத்த வாரம் திங்கள் அல்லது தேர்தல் பிரச்சாரத்தின் கடைசிநாளில் அவர் மீடியாவை சந்தித்து பேச வாய்ப்பு என்று எதிர் தரப்பினர் கூறுகின்றனர். ஆனால், விஜய் தரப்பிலோ அது நடக்க வாய்ப்பில்லை.
தமிழ்ப் புத்தாண்டு அன்று சங்கீதாவுக்கு பிறந்தநாள். அன்று கூட அவர் சென்னை, நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டில் தான் இருந்தார். அவர் சில செட்டில்மென்ட் எதிர்பார்க்கிறார். தனக்கும், தனது குழந்தைகளுக்கும் சொத்தில் பங்கு கேட்கிறார். அது நடந்துவிட்டால், அவர் மீடியாவில் பேச வாய்ப்பில்லை. தனது தனிப்பட்ட வாழ்க்கை பாதிப்பைதான் அவர் விளக்கினார்.
விஜயின் அரசியல் குறித்து, அதற்கு எதிராக செயல்படவில்லை. ஆகவே, சட்டசபை தேர்தலுக்கு முன்பு சங்கீதா பிரஸ்மீட் கொடுக்க வாய்ப்பு குறைவு. இரண்டு தரப்புக்கும் இடையே வக்கீல்கள் மூலம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள். இதற்கிடையில் தவெக தலைவர் விஜய் விரைவில் பிரஸ்மீட் கொடுக்கிறார். அவர் நல்ல செய்தியை சொல்ல இருக்கிறார் என்று தவெக., முக்கியமான நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கூறியிருக்கிறார்.